Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொடை வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கும் குணம் இருக்கும்…! ஸ்டாலினின் திமிர் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி பொளேர் பதில்…!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் அடிக்கிறார் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.

தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக உழவன் ஆப் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார். அதில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப்படுவதை தமிழக முதல்வர் மக்களுக்கு தான் செய்யும் இலவச திட்டம் என்று நினைக்கின்றாரா? மக்கள் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போட வேண்டியது அரசின் கடமை எனவும் யாருடைய உதவியும் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமற்ற தன்னை கொடை வள்ளலாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார முதலமைச்சர்? என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்தநிலையில் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சித் தலைவரின் நீலிக் கண்ணீரும் அரசியலில் அவர் நடந்து கொள்ளும் விதமும் நகைச்சுவையானது.என்று தெரிவித்திருக்கிறார் அதோடு கொரோனா நோய்த்தொற்றிற்கான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கின்றது என்பதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவே அவர் பதட்டப்படாமல் இருக்கலாம் எனவும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கான குணம் வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே வரும் என்றும் எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக ஆட்சியே தொடரும் இனி இதுவே சரித்திரம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version