Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

Representative purpose only

கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகையே வீட்டினுள் பூட்டி வைத்து என்றே சொல்லலாம். இதனால் மற்றவர்கள் பாதித்ததை விட நம் எதிர்கால தலைமுறையாக பள்ளி பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியானது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கின் போது மூடப்பட்ட பள்ளிகள் இன்றும் பள்ளி திறப்பு பல சிக்கலான சவால்களை சந்தித்து வருகின்றது எனக் கூறினால் மிகையாகாது.என்னதான் இணைய வழிக்கல்வி என்று கூறினாலும் ஒரு மாணவன் பள்ளிக்கு வந்து ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் பாடம் கற்பதே சிறந்த கல்விமுறை.

இந்நிலையில் பல கருத்துக்கணிப்பு ஆய்வுகளுக்கு இறுதியில் 9,10,11,12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எனினும் இதில் கொரோனாவால் பாதிக்கப்படும் மாணவர்கள் ஆசிரியர்களும் இருந்து கொண்டு தன வருகின்றனர்.

இந்நிலையில் த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுள்ளார்.மேலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் கோவில்களையும் தினமும் திறக்க உத்தரவு அளிக்க கோரியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரத்திற்கு முன்பும், பின்பும் பொது இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அந்த காலக் கட்டங்களில் மாணவர்கள் வெளியில் சென்றால் பாதிப்பு ஏற்படும். எனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதி அன்று பள்ளிகளை திறக்காமல் நவம்பர் 8-ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் .

தி.மு.க. அரசின் தேர்தல் கால அறிவிப்புகளான பெண்களுக்கு 1000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியார் வங்கி ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதி ஏற்றவாறு ரத்து செய்யவில்லை என்பது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.

மதுக்கடைகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில், வழிபாட்டுதலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறியுள்ளார்.

Exit mobile version