Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்! ஜி கே வாசன் அதிரடி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. சென்னை தி நகரில் நடந்த இந்த கூட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட இளைஞர் அணியின் தொண்டர்கள் பங்கேற்றார்கள். இன்றைய தினம் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக எங்களுடைய தரப்பின் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று ஜி கே வாசன் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி வெற்றி அடைவதற்காக எங்களுடைய கட்சியின் இளைஞரணி, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பணியாற்றுவார்கள். அதோடு எதிர்க்கட்சியினரை தோற்கடிக்க எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டமன்றத்தில் எங்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம்.அந்த முயற்சி வெற்றி பெறும்வரை நாங்கள் எங்களுடைய முயற்சி தொடர்ந்து கொண்டே இருப்போம் என்றும் ஜி கே வாசன் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version