Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

Glad news released by the Chief Minister to the farmers!

Glad news released by the Chief Minister to the farmers!

விவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மேலும் அது மிகத் தீவிரமாக பொழிந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. எனவே விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் சாலைகளும் மிகவும் மோசமான நிலையை எட்டியது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஆய்வு செய்து அறிக்கையை இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் வடிகாலை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மேலும் மழையில் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், சேதமடைந்த குருவை, சொர்ணவாரி, பயிர்கள், முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த பயிர்களை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும் ஹெக்டர் ஒன்றுக்கு 6,038 மதிப்பில் இடுபொருள் தரப்படும் என்றும் குறுகிய கால விதை நெல் 45 கிலோ, நுண்ணூட்ட உரம் 25 கிலோ, யூரியா 60 கிலோ, டிஏபி உரம் 125 கிலோ வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version