உலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!

0
123

கடந்த 2019ஆம் ஆண்டு நோய்த்தொற்று பரவல் சீன நாட்டின் வூகான் நகரில் இருந்து வெளியானது அப்போது இரும்பு சீன நாடு இந்த நோய்த்தொற்று பரவலில் சிக்கிக் கொண்டு படாத பாடு பட்டது. அதன் பின்னர் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு சீன நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதேபோல இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது அன்றிலிருந்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது இதனால் இந்திய மக்கள் பலர் பல சிரமங்களை எதிர் கொண்டார்கள் அதோடு மத்திய மாநில அரசுகளை விமர்சனமும் செய்தார்கள்.

ஆனாலும் காலப்போக்கில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு மக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தொடங்கினார் இதனால் நோய் தொற்று வராமல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது அதேபோல் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் நாடு முழுவதும் மிக விரைவாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சீன நாட்டிற்கு அடுத்தபடியாக நூறுகோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது.

அதேபோல தமிழகத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது வாரம்தோறும் மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டு பலருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் நோக்கத்தில் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியானோரின் எண்ணிக்கை யும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையிலும் நோய்த்தொற்று பரவாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் நோய்த்தொற்று பரவல் பாதிப்பின் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடும் இருக்கின்ற சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24.78 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்சமயம் இருபத்தி நான்கு கோடியே 78 லட்சத்து 24 ஆயிரத்து 488 நபர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 22 கோடியே 45 லட்சத்து 23 ஆயிரத்து 746 நபர்கள் குணம் அடைந்து இருக்கிறார்கள் அதோடு நோய்த்தொற்று பாதிப்பால் இதுவரையில் 50 லட்சத்து 20 ஆயிரத்து 127 பேர் பலியாகி இருக்கிறார்கள். நோய்த்தொற்றுக்கு தற்போது 18 கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.