வெயிலுக்கு குளுகுளு எலுமிச்சை சர்பத் – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!

0
289
Glu Glu Lemon Sorbet for Sun - Delicious when done this way!

வெயிலுக்கு குளுகுளு எலுமிச்சை சர்பத் – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் உடல் சூடு அதிகரித்து உஷ்ணம்,வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.வெயில் காலங்களில் உடலை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.ஆனால் கோடை காலத்தில் பெரும்பாலானோர் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை.இதனால் அம்மை,வியர்க்குரு,வெப்ப தடுப்பு,தோல் சிவந்து போதல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள எலுமிச்சை சர்பத் செய்து குடிப்பது நல்லது.எலுமிச்சை உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.இந்த எலுமிச்சம் பழத்தில் சுவையான சர்ப்த் செய்து குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)நன்னாரி சர்பத்
3)ஐஸ்கட்டி
4)குளிர்ந்த நீர்

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு கிண்ணத்திற்கு சாறு பிழிந்து கொள்ளவும்.எலுமிச்சம் பழ விதையை மட்டும் நீக்கி விடவும்.

அதன் பின்னர் 1/4 கப் நன்னாரி சர்பத்தை அதில் ஊற்றி கலந்து விடவும்.பின்னர் 1 கப் குளிர்ந்த நீர் ஊற்றி கலக்கவும்.

பிறகு அதில் 2 துண்டு ஐஸ்கட்டி போட்டு கலக்கினால் சுவையான எலுமிச்சை சர்பத் தயார்.அடிக்கின்ற வெயிலுக்கு இந்த எலுமிச்சை சர்பத் செய்து குடித்தால் உடல் சூடு தணிந்து குளுமையாகும்.

அதேபோல் துளசி,பால்,சியா விதை உள்ளிட்ட பொருட்களில் சர்பத் செய்து குடித்தாலும் உடல் குளுமையாக இருக்கும்.