தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி! ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் மோடி வெல்கம் மோடி!

0
317

தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணத்திற்காக திட்டமிட்ட பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்காக காந்திகிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் சாலை மார்க்கமாக செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக மதுரை முதல் திண்டுக்கல் வரையில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ட்விட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் இன்றும் சமூக வலைதளங்களில் அவருடைய வருகைக்கு எதிரான வாசகங்கள் உலா வருகின்றன.

ஆனால் அப்படி உலா வரும் வாசகங்களுக்கு தமிழக பாஜகவை சார்ந்தவர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பாஜகவை திமுக மிக கடுமையாக எதிர்த்தும், விமர்சனம் செய்தும் வந்தது. ஆகவே திமுகவின் உடன் பிறப்புகள் சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் தற்போது திமுக ஆட்சிக் கட்டில் அமர்ந்திருக்கும் போதும் கூட அவருடைய வருகைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால் இதற்கும் மறைமுகமாக திமுகவே காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

 

ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே பிரதமரின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது எங்களுடைய ஆட்சிக்கு அவமானம் ஆகவே இந்த நிகழ்வுக்கு நாங்கள் காரணம் அல்ல என்று திமுக ஒரு புறம் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது.

 

ஆனால் மறுபுறமோ பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் திமுகவின் ஐடி விங் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் கோ பேக் மோடி என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இதற்கு பதிலடி வழங்கும் விதத்தில் பாஜகவினர் வெல்கம் மோடி என்ற வாசகத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். தொடக்கத்தில் கோ பேக் மோடி மற்றும் வெல்கம் மோடி என்ற வாசகம் ட்ரெண்டிங்கில் சற்றே பின் தங்கியுள்ளதாக தெரிகிறது.