Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்டுகுட்டிக்கு மனித முகமா? மத்திய பிரதேசத்தில் நடந்த அதிசயம்..!

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் எங்கிறது அறிவியல். அதனாலேயே சிலர் மனித மனத்தை குரங்கோடு ஒப்புடுவர். இப்படி இருக்கையில் சில விலங்குகள் மனிதனுடைய அம்சத்தை பெற்று பிறந்திருப்பது அதிசயிக்கும் நிகழ்வாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்தெறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நவாப் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கால்நடை மேய்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றது. ஆடு குட்டி ஈன்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அந்த ஆட்டுகுட்டி மனித முகத்தை ஒத்த அமைப்புடன் பிறந்துள்ளது.

அந்த குட்டியின் முகத்தில் மனிதனைய் போன்றே கண்கள், வாய், மூக்கு உள்ளது, மேலும் கண்களை சுற்றி கருவளையங்கள் கண்ணாடி போன்று இருந்துள்ளது மேலும், தாடி போல அடர்த்தியா வெள்ளை முடி உள்ளது.

மனித முகம் அமைப்புடைய ஆட்டுகுட்டி பிறந்தது அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனை அடுத்து, கூட்டம் கூட்டமாக அந்த பகுதி மக்கள் அந்த அதிசய ஆட்டுகுட்டியை கண்டு சென்றனர். பலர் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version