ஆட்டு நுரையீரல் கிரேவி இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! 100% கேரண்டி!!

0
84
#image_title

ஆட்டு நுரையீரல் கிரேவி இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! 100% கேரண்டி!!

ஆட்டுக் கறியை விட அதன் உள் உறுப்புகளில் தான் அதிக புரதம் மற்றும் சத்துக்கள் இருக்கிறது.ஆட்டு இறைச்சியை விட விலை மிகவும் குறைவான அதே சமயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று நுரையீரல்.நம்மில் பலர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.அவர்கள் இந்த ஆட்டு நுரையீரலை உணவாக எடுத்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஆட்டு நுரையீரல்

*பெரிய வெங்காயம் – 2(நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

*மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

*மல்லித்தூள் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 4 முதல் 5 தேக்கரண்டி

*மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி,பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – ஒரு கொத்து

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:-

1)ஆட்டு நுரையீரலை பக்குவமாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2)பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

3)அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 1 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி மிளகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.

4)அவற்றை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

5)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விடவும்.

6)அதன் பின் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி,மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி,கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.

7)பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு நுரையீரலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

8)அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

9)கொதிக்கும் நேரத்தில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொள்ளவும்.

10)அவை நன்கு சுண்டி வந்ததும் வாசனைக்காக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும்.