Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோட் படத்தின் முதல் பாடல் வெளியீடு – ரசிகர்கள் மகிழ்ச்சி

goat movie first song release - fans delight

goat movie first song release - fans delight

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது. இதனால்  ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், சினிமா துறையில் இருந்து முழுவதுமாக  விலக போவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பேரடியாகவே அமைந்தது. இதனிடையே ஒப்புதல் அளித்த படங்களில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில்,  வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் விஜய் தற்போது  நடித்து வருகிறார்.
விஜய்யின் 68 வது படமாக உருவாகி வரும் கோட், ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.  மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் களமிறங்கியுள்ளனர்.
புதுச்சேரி, கேரளாவை தொடர்ந்து, தற்போது வெளிநாட்டில் கோட் படத்தில் படம்பிடித்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின்  புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதில்,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் பாடலுக்கு தயாரா என படக்குழு போஸ்டர் ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, ” தமிழ் புத்தாண்டில் சம்பவம் உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே  படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பதிவில் நாளை மாலை கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகுமென தெரிவித்துள்ளார்.
Exit mobile version