காணிக்கை இருந்தால்தான் கடவுளை காண முடியும்!! தீட்சிதர் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி!!

0
115
God can be seen only if there is an offering!! High Court judge in Dikshitar case!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய வந்த செவிலியரை தாக்கியதாகவும், அவரிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகவும், அவர்களது சபையின் பக்தர்களை தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி அவர்மீது குற்றச்சாட்டு தீட்சிதர் குழுவில் தெரிவிக்கபட்டது. இதனால் தீட்சிதர் குழு அவரை சஸ்பெண்ட் செய்தது இதனை தொடர்ந்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு பதிவு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டை விசாரித்த கடலூர் இணை ஆணையர் சஸ்பெண்டை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து தீட்சிதர் குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் போது தீட்சிதர் குழுவின் முடிவில் இந்து அறநிலைய துறைக்கு அதிகாரம் இல்லை. இணை ஆணையரின் உத்தரவு ரத்துசெய்ய வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து நடராஜ தீட்சிதர் சார்பாக பேசிய வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள். இதனை நீதிமன்றம்தான் கட்டுபடுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை மறக்கவே கோவில்களை தேதி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மன கஷ்டத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு பதில் கூறிய நீதிபதி தீட்சிதர்கள் ஆணவத்தோடு நடந்து கொள்வது நல்லது கிடையாது. மேலும் அந்த கோவிலுக்கு வரும் மக்கள் அனைவரும் அவர்களுடன் சண்டைக்கு வருவது போல நினைக்கிறார்கள். கோவில் தங்களுக்கு சொந்தமானது தங்களை கடவுளை விட மேலாக நினைக்கிறார்கள், அதுமட்டுமல்லாமல் கோவிலில் காணிக்கை போட்டால் மட்டுமே பூ கிடைக்கும் இல்லையேல் விபூதி கூட கிடைக்காது என நகைச்சுவையாக கூறினார். இதையடுத்து இந்து சமய அறநிலையதுறைக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.