Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்!

god-who-suddenly-showed-up-for-the-candidate

god-who-suddenly-showed-up-for-the-candidate

வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இதனால் தேர்தல் களமானது விறுவிறுவென்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.கட்சியினர் தனது அறிக்கைகளை மக்களிடம் கூறியும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களின் வேதமாக  நினைப்பது தன்னை மக்களோடு மக்களாக பாவித்துக் கொள்வது தான்.

அதனால் பல அரசியல்வாதிகள் மக்களோடு தேநீர் அருந்துவது,பேருந்தில் செல்வது,ரோடு கூட்டுவது என மக்கள் அனைவர் முன்னிலையிலும் தன்னை மக்களின் தொண்டனாக காட்டிக்கொள்கிறார்கள்.இந்த தேர்தலின் போது தான் பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடக்கும்.அது பல நியூஸ் சேனல்களுக்கு தலைப்பு செய்தியாகவும்,அந்த செய்தியை பார்ப்பவர்களும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்தவகையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை பழங்காநந்தம் பகுதியில் வீடு வீடாக வாக்கு கேட்டு சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது அவரை வரவேற்பதற்கு பெண்கள் அனைவரும் ஆரத்தி எடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.அதில் ஆரத்தி எடுக்க காத்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென்று சாமி ஆட தொடங்கினார்.அவர் சாமி ஆடி அமைச்சருக்கு வாக்கு சொன்னார்.அப்போது அமைச்சர் அந்த சாமி ஆடிய மூதாட்டிக்கு சால்வை போர்த்தினார்.

இவர்கள் ஓட்டுக்காக சாமியை கூட விட்டு வைக்கவில்லை என மக்கள் பேசினர்.தேர்தல் களம் கடைசி தேதியை நெருங்குவதால் கேப் கிடைக்கும் இடங்களைக் கூட விடாமல் வேட்பாளர்கள் ஒட்டு கேட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இவர்களின் பிரச்சாரம் செய்வது சாமிக்கே பிடிக்கவில்லை  போல திடீரென்று தோன்றிவிட்டது என மக்கள் கிண்டல்,கேளி செய்தனர்.

Exit mobile version