Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!!

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!!

தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானபோதும், அதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நிசப்தம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த அனுஷ்கா, அதையடுத்து ஒரு இளவட்ட தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகின.

ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.இதனால் அனுஷ்கா தன் முகநூல் பக்கத்தை தானே எடுத்துக்கொண்டு நிர்வகிக்க ஆரம்பித்தவுடன் லட்சக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். தற்போதுவரை அனுஷ்காவின் முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

தென்னிந்திய திரைப்படத்துறையில் வேறு யாருக்கும் இத்தனை எண்ணிக்கையில் முகநூல் ஆதராவாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் தற்போது ஒரு காமெடி படத்தில் அனுஷ்கா நடிக்க போவதாக டோலிவுட்டியில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு பெரிதாக காமெடி வேடங்களில் நடிக்காத அனுஷ்கா இந்த படத்தில் முழு நீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version