சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து விற்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது . இன்று கிராமிற்கு 53 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 424 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 குறைந்து ரூ.4911-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.424 குறைந்து ரூ.39288-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 ரூபாய் குறைந்து ரூ.5157 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து ரூ.41256-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டு குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 1.80 குறைந்து ஒரு கிராம் 74.90-விற்க்கும், ஒரு கிலோ ரூ.74900 க்கும் விற்கப்பட்டு வருகிறது.
படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி கண்டுள்ளனர். உயர பறக்கும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.