Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கம் விலை அதிரடி உயர்வு!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Gold has gone up by Rs 600 per bar. A sawan gold is selling for Rs 57,640

Gold has gone up by Rs 600 per bar. A sawan gold is selling for Rs 57,640

gold price: இன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.57,640க்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் வாழுகின்ற மக்கள் தங்களது சேமிப்புகளை ஆபரண தங்க நகைகளாக வாங்கி சேமித்து வைப்பது அத்தியாவசியமாக மாறி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே தங்க விலை ஏற்றமாகவே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர், டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  எனவே நேற்று,   தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ, 57,040 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று டிசம்பர்-10, அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,205க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு சவரன் தங்கம் ரூ. 57,640 க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி வேலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு 4000 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Exit mobile version