எட்டாக்கனி ஆக போகிறதா தங்கம்? விலையில் புதிய உச்சத்தை எட்டியதால் அச்சத்தில் பொதுமக்கள்!  

0
172
#image_title

எட்டாக்கனி ஆக போகிறதா தங்கம்? விலையில் புதிய உச்சத்தை எட்டியதால் அச்சத்தில் பொதுமக்கள்!  

தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி தங்கம் வாங்குவது என்பது பலருக்கும் கனவாக கூடிய நிலையில் விலையானது ஏற்றத்திலே இருந்து கொண்டு வருகிறது.

தங்கம் இந்த பெயரை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என கூறலாம். அதிலும் குறிப்பாக தங்கத்தை விரும்பாத பெண்களே இல்லை. பெண்கள் வாழ்வில் தங்கம் ஒரு பிரிக்கப்படாத அங்கம் ஆகிவிட்டது.  அனைத்து நல்ல காரியங்களிலும் பயன்படுத்தப்படும் தங்கம் தற்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அதன் விலையேற்றம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

தங்கம் விலை கடந்து சில வருடங்களாகவே ஏறு முகத்தையே சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய்.880 உயர்ந்து  சவரன் 44,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு  கிராமிற்கு ரூபாய் 110 உயர்ந்து ஒரு கிராமானது ரூ.5,560 க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது இதுவே முதல் முறை.

இந்த விலையேற்றம் பொதுமக்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்க விலை  வரலாற்றில் 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,360- க்கு விற்றதே அதிகபட்ச விலையாக இருந்து வந்தது. இன்று அந்த விலையேற்றத்தை பின்னுக்கு தள்ளி விட்டு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.30 உயர்ந்து 74.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.