திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!

0
119
Gold jewelery worth crores seized at Trichy Airport!!

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை செய்த போது அதில் இரண்டு பயணிகள் தங்கள் துணிகளில் கடத்தி மறைத்து வைத்திருந்த 1488 கிராம் எடை கொண்ட தங்கத்தை 8 தங்கச் சங்கிலிகள், மற்றும் 2 தங்க வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி என கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

மேலும் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஓரு பயணியின் பையில் சவூதி, அமெரிக்கா, சிங்கப்பூர், அரேபியா ஆகிய நாடுகளின் கரன்ஸிகள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அதன் மதிப்பு கிட்டதட்ட இந்திய மதிப்பின் படி ரூ.51.39 லட்சம் என விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.