உங்கள் பழைய தங்கம் புதியது போல மாற வேண்டுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

0
218
#image_title

Gold Jewellery Cleaning in Tamil: தங்க நகைகள் என்றாலே நாம் அனைவருக்கும் அலாதி பிரியம் தான். அதில் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தங்க நகைகள் மீது அவர்களுக்கு இருக்கும் மோகம் இன்றளவும் குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். அதற்காக ஆண்களுக்கு இல்லையா? என்று கேட்டால் தங்க நகைகள் மீது ஆசைப்படும் ஆண்களும் இங்கு இருக்கிறார்கள். மேலும் தங்கம் வெறும் அலங்கார பொருளாக மட்டும் பார்க்காமல் முதலீடு செய்யும் பொருளாகவும் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது உடனடியாக வீட்டில் இருக்கின்ற நகையை எடுத்து அடகு வைத்து பணத்தை பெற முடியும். இதனால் தங்கத்தின் மீது அதிக அளவு மக்கள் முதலீடு செய்கிறார்கள்.

நாம் ஆசையாக சில தங்க நகைகளை பார்த்து பார்த்து வாங்குவோம். ஆனால் அதனை அடிக்கடி பயன்படுத்தி வருவதால் அது வாங்கும் போது இருந்த பொலிவு  கடைசிவரை நிலைத்திருப்பதில்லை. உடலின் சூடு காரணமாக அந்த தங்கத்தின் பொலிவு மறைந்து விடுகிறது. இதனால் பார்ப்பதற்கு அந்த பழைய தங்கம் வாங்கும் போது இருந்த அந்த பொலிவு இருப்பதில்லை. எனவே இந்த பதிவில் நாம் வாங்கிய தங்க நகைகளை எப்படி புதிதாக அதே பொலிவுடன் மாற்றலாம் என இந்த பதிவில் (Thanga Nagai Sutham Seivathu Eppadi) காணலாம்.

பழைய நகைகளை புதிது போல் மாற்ற டிப்ஸ்

சோடா உப்பு: கொண்டு நம்முடைய பழைய தங்க நகைகளை புதிதாக மாற்ற முடியும். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக்கொண்டு ஒரு அடுப்பை பற்ற வைத்து அதை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனை இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். இளம் சூடாக வரும் பொழுது அதில் தேவையான சோடா உப்பு மற்றும் நாம் தலைமுடிக்கு பயன்படுத்தும் ஷாம்புவை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை நன்றாக கலக்கி பழைய நகைகளை அதில் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் ஊறினால் போதும். அதனை மெதுவாக பிரஷ் கொண்டு தேய்த்தால் நகைளில் படிந்துள்ள அழுக்கு மறைந்து புதிய பொலிவுடன் காணப்படும்.

பொதுவாக நகைகளை சுத்தம் செய்யும் பொழுது பிரஷ் கொண்டு அழுத்தமாக தேய்க்க கூடாது. ஏனென்றால் நீங்கள் வாங்கும் நகைகளில் கற்கள் பதித்திருந்தால் அது கற்களை சேதப்படுத்திவிடும். இதனால் வாங்கும் பொழுது இருந்த மதிப்பு நகைகளை சுத்தம் செய்வதற்குப் பிறகு இருக்காது. எனவே பிரஷ் கொண்டு சுத்தம் செய்யும் பொழுது கவனமாக செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் மென்மையான காட்டன் துணி கொண்டு அதனை சுத்தம் செய்யலாம்.

பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட்:  முறையில் நாம் பழைய நகைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை வெதுவெதுப்பான நீராக மாறும் வரை ஆறவைத்து பிறகு அதில் தங்க நகைகளை போட்டு சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு டூத் ஒரு பிரஷில் பேஸ்ட்டை எடுத்து மெதுவாக தேய்த்துக்கொள்ள வேண்டும். அழுத்தி தேய்க்க வேண்டாம் இல்லை என்றால் பழைய தங்க நகைகள் சேதம் (How to Clean Gold Jewelry in Tamil) அடையலாம்.

தவிர்க்க

எலுமிச்சை பழம் கொண்டு தங்க நகைகளை சுத்தம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் சில தங்க நகைகளில் கற்கள் பொருத்தப்பட்டிருக்கும் அவ்வாறு இருக்கும் பொழுது எலுமிச்சை பழம் கொண்டு சுத்தம் செய்வதால் அது நகைகளில் பதித்திருக்கும் ரத்தின கற்களை பாதிக்க செய்யலாம். சிட்ரிக் ஆமிலம் நகைகளை பாதிப்படைய செய்யும்.

கற்கள் நிறைந்த தங்க நகைகளை சுத்தம் செய்யும் பொழுது பாதுகாப்பாக கையாள வேண்டும் அதனை சுத்தம் செய்வதற்கு பிரஷ் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சுத்தம் செய்ய தேவைப்படும் சோடா உப்பு, பேக்கிங் சோடா, சோப்பு பவுடர், ஷாம்பு போன்றவற்றை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அப்படியே அந்த நகைகளை மூழ்கும் படி வைத்தால் போதும். மற்றபடி அதனை அழுத்தி தேய்த்துக் கொள்ள வேண்டாம். இதனால் உங்கள் பழைய தங்க நகைகள் பாதிப்படையலாம்.

மேலும் படிக்க: Gold Anklet in Tamil: தங்கத்தால் ஆன கொலுசு மெட்டி ஏன் பெண்கள் அணிவதில்லை தெரியுமா?