படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன?
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் தங்க ஆபரணங்கள் தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் தெனிந்திய மாநிலங்களில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான அளவிற்கு அதிகமான மோகமே.
தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. இந்த ஏற்ற இறக்கமானது சென்னை தங்க வர்த்தகத்தில் பிரதிபலித்துள்ளது.
சமீபத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பிறகு மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் ஆபரணம் வாங்க வேண்டுமென்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.29,104-க்கும், கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.3,638-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.30,408-க்கும், கிராம் ரூ.3801-க்கும் என விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.47.70-க்கும், கிலோ ரூ.47,700-க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.