Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு சவரன் 36,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை.! பொதுமக்கள் அதிர்ச்சி‌.!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ‌.200 உயர்ந்து நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ரூ.4525 விற்பனையாகிறது. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.36,200 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10-க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.69,100க்கு விற்பனை செய்யப்படுகிறது‌.

Exit mobile version