சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு 328 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார காரணிகள் காரணமாக கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் யாருமே நம்ப முடியாத வகையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூன் 25) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ.4,618 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதே ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 4,659 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 41 ரூபாய் குறைந்துள்ளது.
அதேபோல நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது 37,272 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த 8 கிராம் ஆபரணத் தங்கம் 328 ரூபாய் குறைந்து 37,272 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதாவது நேற்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.4,891லிருந்து இன்று ரூ.4,850 ஆகக் குறைந்து விற்பனையாகிள்ளது.
அதேபோல,ஒரு சவரன் தூய தங்கம் நேற்று 39,128 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 328 ரூபாய் குறைந்து 38,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல வெள்ளியின் விலையும் இன்று ஓரளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.53.50 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.52.40 என்ற அளவில் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 52,400 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரம்:
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது மும்பையில் ரூ.4,704 ஆகவும், டெல்லியில் ரூ.4,706 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,763 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,624 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,553 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,638 ஆகவும், ஒசூரில் ரூ.4,643 ஆகவும், கேரளாவில் ரூ.4,442 ஆகவும் விற்பனையாகி வருகிறது.