தற்பொழுது தங்கம் விலை ஆனது நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 இல் தொடங்கி 1000 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்று அடிக்கடி தங்கம் விலை ஆனது உயர்வது குறித்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை எந்த எல்லையில் சென்று நிற்கும் என்பது குறித்தும் பிரபல பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் விளக்கி இருக்கிறார்.
அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது :-
தங்கம் விலை சாதனை படைத்திருக்கிறது என தொடங்கியவர், அமெரிக்க டாலரின் உடைய மதிப்பிலேயே தங்கம் விளையும் உச்சத்தை தொட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தங்கம் விலை இப்படி அதிகரித்துக் கொண்டு செல்வது என்பது கூடிய விரைவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு 9000 ரூபாய் எட்டும் என்றும் அதற்கான செய்கூலி சேதாரம் என அனைத்தும் சேர்ந்து 9500 ரூபாய் எட்டுமென தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் நிகழக்கூடிய இந்த நிச்சயமற்ற தன்மையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வருவதற்கான காரணமே தங்கம் விலை உயர்வை நிர்ணயிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது நமக்கு நல்ல செய்தி எனக் கூறியவர் பல ஆண்டுகளாக தங்கத்தை சேர்த்து வைத்திருக்கக் கூடியவர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றும் தங்கம் தான் எப்பொழுதும் ஆபத்தான காலங்களில் உதவும் என தெரிவித்திருக்கிறார். அதோடு கூடவே சீனா தற்பொழுது அமெரிக்க கடன் பத்திரங்களை பெற்று வேறு விதங்களில் முதலீடு செய்வதாகவும் செலவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து வரக்கூடிய நிலையில், உண்மையில் சீனா அமெரிக்க கடன் பத்திரங்களை விற்று அதற்கு தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதாக தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் வெளியான தகவல்களின்படி சீனாவிடம் 750 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க கடன் பத்திரங்கள் இருப்பதாக கூறினாலும் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு கணக்குகளை வைத்து சீனாவானது அமெரிக்க கடன் பத்திரங்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்றும் இதற்கான துல்லிய அளவு என்பது இன்றுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுவரை சீனா 57 பில்லியன் டாலரை பெற்றிருப்பதாகவும் அதற்கு இணையான தங்கத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் உடைய மதிப்பு 3,300 டாலர்களை எட்டும் என தெரிவிப்பது தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.