Gold News: தங்கம் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த 5-நாட்களில் மட்டும் ரூ.2,920 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ரூ.101-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ரூ.59,000-த்தை தாண்டி விற்பனை செய்தது. அதனை தொடர்ந்து இப்போது தங்கம் விலை ரூ59,000-த்தை நெருங்கி மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது என தலைதூக்கி காட்டியுள்ளது.
இதனால் மக்கள் வேதனையில் உள்ளார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,225-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி தங்கம் விலை குறையாமல் அதிகரித்து செல்வது நகை பிரியர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.