GOLD : தங்கம் விலை ஒரே நாளில் மீண்டும் உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 59,000-யை தாண்டியது என மக்கள் வேதனையில் உள்ளார்கள்.
மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை மட்டும் எப்போதும் குறையவே குறையாது. காரணம் என்னவென்று அது யாருக்கும் தெரியாது. தங்கம் விலை சில மாதங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. மக்கள் எப்போது தங்கம் விலை குறையும் என ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் தங்கம் விலை குறைந்த பாடே இல்லை.
விலை ஏறி கொண்டு தான் செல்கிறது என மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. பிறகு கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையை தாண்டியது. அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்கலாம். இது மட்டும் அல்லாமல் கடந்த 23ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி விலை உயர்ந்த படியே இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது.
இது மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.59,000-த்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.108 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.