தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17ஆம் தேதி சவரனுக்கு 56 ஆயிரத்து கீழ் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து 19ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன்படி 19ஆம் தேதி 20ஆம் தேதி கணிசமான விலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும் கடந்த 21ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57, 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனை அடுத்து 22-ஆம் தேதியும் 23-ஆம் தேதியும் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஒரு பவுன் ரூ 58, 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 27-ஆம் தேதி வரை கணிசமான விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. அதனை அடுத்து நேற்று 28-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 120 குறைந்து 56 ஆயிரத்து 720 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்த்தி ரூ.57280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதாவது ஒரு கிராமிற்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை அடுத்து வெள்ளியின் விலை இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை ஆகி வந்தது. தற்போது கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.