தங்கம் விலை திடீர் சரிவு!! இன்றைய நிலவரம்!!

0
135
Gold price suddenly fell!! Today's situation!!

Today Gold Rate:  சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகமாக உள்ள நிலையில் இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (28.10.2024) சற்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதை தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. அக்டோபர் 16- அன்று ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதேபோல் கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.

தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்களுக்கு தங்கத்தின் மீதான காதல் மற்றும் மாறுவது இல்லை. எப்போதும் தங்க கடைகளில் தங்க பிரியர்கள் கடன் வாங்கியாவது நகை வாங்குகிறார்கள். இதே போல் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்த்து மக்கள் வேதனையுடன் உள்ளார்கள். இவ்வளவு அதிகமாக இருக்கும் போது எப்படி நகைகள் வாங்குவது என அச்சத்தில் உள்ளனர்.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ. 7,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளி ஒரு கிராம் ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இப்படி தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் போது மக்கள், தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும் என்ற சோகத்தில் உள்ளார்கள்.