Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Gold Price Today in Chennai

Gold Price Today in Chennai

தொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

தொடர்ந்து 4 வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் முதலீட்டாளர்கள் செய்திருந்த பெரும்பாலான முதலீடுகளையும் தற்போதைய சூழலில் பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து அதன் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் மக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது.இந்த நிலையில், கடந்த இரு தினங்களை போலவே இன்றும் தங்கத்தின் விலை சரிவுடன் தொடங்கியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 14 குறைந்து ரூ.4,380 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version