தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு! இன்றைய விலை நிலவரம்

0
152

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து 37,120 ஆகவும்,கிராமுக்கு ரூ.29 அதிகரித்து 4,640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை கிராம் ரூ.53 ஆகவும், கிலோவிற்கு ரூ.50,000 என விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பக்கம் பெட்ரோல் ,டீசல் விலை அதிகரித்து வருகிறது என்றால் தங்க விலையும் அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா காரணமாக கடைகள் மூடியுள்ள நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று தங்கம் விலை கிராம் ரூ.4,610 ஆகவும், சவரனுக்கு ரூ.36,880 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.மேலும் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.49 அதிகரித்து ரூ.4,659 ஆகவும்,சவரனுக்கு ரூ.392 அதிகரித்து ரூ.37,272 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 6 மாதங்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.924, சவரனுக்கு ரூ.7,392 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.