Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி தங்கத்தை வாங்க முடியாத? ரூ.58 ஆயிரத்தை தொட்டது விலை!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Gold price touched Rs.58 thousand!! Jewel lovers in shock!!

Gold price touched Rs.58 thousand!! Jewel lovers in shock!!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று  கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1200 அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது. அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கி முதல் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது.

இந்த விலை உயர்ந்த நிலையில் அடுத்த நாள் ரூ.360 அதிரடியாக விலை குறைந்தது. இதனால் நகை பிரியர்கள் சற்று சந்தோஷம் அடைந்தனர். கடந்த 5,6,7 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை எந்த ஒரு விலை மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் தங்கம் ரூ.57,720 விற்பனை செய்யப்பட்டு ஒரு கிராம் ரூ.7,115 என விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி நேற்று  தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225-க்கும் ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.57,800 விற்பனை செய்யபடுகிறது. ஆனால் இன்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 100  ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி  ஒரு லட்சத்திற்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version