Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! இன்று தங்கம் வாங்கலாமா?? தங்கம் வெள்ளி விலை !!

Gold Silver Price Status !! Gold prices continue to fall !! Happy people !!

Gold Silver Price Status !! Gold prices continue to fall !! Happy people !!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! இன்று தங்கம் வாங்கலாமா?? தங்கம் வெள்ளி விலை !!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டு இருந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சற்று சரிந்துள்ளது. . ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று சரிந்து தான் காணப்படுகிறது. தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் தான் உள்ளது. இது அமெரிக்க சந்தையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டாலரின் மதிப்பு சற்று வலுவாக உள்ளது. தங்கம் விலை ஆனது என்று சற்று சரிந்து உள்ளது.

இந்தியா உற்பட பல நாடுகளிலும் இரண்டாம் மரும் மூன்றாம் அலை கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்தது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையானது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தமானது, தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிக சரிவினைத் தடுத்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்ததை அடுத்து, ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று சரிவில் தான் தொடங்கின. இது அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் என பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன.

இந்தியாவில் தங்கமானது தற்போது 10 கிராமுக்கு 157 ரூபாய் குறைந்து, 49,560 ரூபாயாகவும் ஒரு சவரனுக்கு 39,648 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனவே மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.
வெள்ளியின் விலையும் குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 72,900 ரூபாயாக காணப்படுகிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 5 ரூபாய் அதிகரித்து, 4,546 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 36,368 ரூபாயாகவும் பட்டகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, இது ரொம்ப அங்க சரியான நேரம் இல்லை. மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்

Exit mobile version