தொடர்ந்து சரியும்  தங்கம் விலை!! இப்போது தங்கம் வாங்கலாமா!! நிபுணர்கள் சொல்வது என்ன?

0
90
Gold prices have been falling since the beginning of this week

GOLD PRICE: இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் மக்கள் அதிக அளவில் தங்களது சேமிப்பை தங்கமாக வாங்கி வருகிறார்கள். தங்களது  சேமிப்புகளை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ 59,000 ஆக உச்ச பெற்றது. இந்த நிலையில் அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. நேற்றைய தினம் நவம்பர்-27  தங்கம் ஒரு கிராம் ரூ.7,105 ஆக  இருந்தது. ஒரு சவரன் தங்கம் 56,840 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று நவம்பர்-28 தங்கம் விலை சவரனுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம்  தங்கம் ரூ.7,090 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 ரூபாய் குறைந்து உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.56,720 ஆக விற்பனையாகி வருகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000 ஆக உள்ளது. வெள்ளி விலை பெரிதளவில் மாற்றம் ஏற்படாமல் இருக்கிறது.

தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருவதால் இது தங்கம் வாங்க சரியான நேரம் ஏன் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தங்கம் விலை வீழ்ச்சி என்பது மாறும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.