Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

நாட்டில் அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன்
தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு நிகரான அளவில் கடந்த ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் கடந்த மே மாதத்தில் 600 கோடி டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஜூலை மாதத்தில் முதல் நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு அதிரடியாக 856 அதிகரித்தது. 1 சவரன் ஆபரணத் தங்கம் 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல 1 கிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, இதனை அடுத்து விலை அதிகரிக்க தொடங்கியது.

கடந்த திங்கள்கிழமை அன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்தது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 38,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், தங்கம் விலை தற்போது சவரனுக்கு 520 ரூபாய் அதிரடியாக குறைந்தது. அதனடிப்படையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 38000க்கும் கீழ் சென்றது. அதாவது ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, ஒரு கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் தற்போது ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு சவரனுக்கு 544 குறைந்து ஒரு சவரன் 37,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது 4672 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்

Exit mobile version