Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

50 ஆயிரத்தை தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை.? வரலாறு காணாத மாற்றம்.!!

வரலாற்றில் முதன்முதலாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்சேஞ்சான எம்சி எக்‌ஸில் 10 கிராம் தங்கத்திற்கான ஆகஸ்ட் மாதத்தின் விலையானது 50,085 ரூபாயைத் தொட்டிருக்கிறது. இந்தியா ப்யூச்சர் சந்தையில் பத்து கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை கடந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

 

இதேபோல் எம்சி எக்ஸ் சந்தையில் வெள்ளிக்கான ஒரு கிலோ செப்டம்பர் மாத விலை 61 ஆயிரத்தை தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் 1800 டாலரைத் தாண்டி விற்பனை ஆகி வருவது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத பெரிய மாற்றம் என வர்த்தக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

அதேபோல் சென்னை இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு ரூ.38,280 விற்பனையாகி வருகிறது. நேற்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,736 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் தற்போது 24 கேரட் தங்கத்தின் ஒரு சவரன் விலை 40,152 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 65,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Exit mobile version