பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அனைவரும் கண்ணை கசக்கும் அளவிற்கு தங்க விலை எகிறி உள்ளது. நடுத்தர மக்கள் தாலிக்கு கூட தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. ஏனென்றால் நாளுக்கு நாள் தங்க விலை ஏறிக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று? நிபுணர்களின் கருத்து என்னவென்றால்,
நாட்டின், கடந்த ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பை ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் 38% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
அதே வேளையில், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கருத்தில்கொண்டு முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்து வருவதால், அதன் விலை தினந்தோறும் வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை அடைந்து வருகிறது.
அதன் காரணமாக, தங்க நகை வாங்குவதில் மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டாத சூழலே நிலவுகிறது. அதனால் தங்கத்தின் இறக்குமதி வருங்காலங்களில் மேலும் குறைவதால் தங்கத்தின் விலை உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.