Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு !வரலாறு காணாத உச்சம்!

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு . வரலாறு காணாத உச்சம்!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,400 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு.

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ 64 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5188 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41504 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

24 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5448 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.43584 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 72.50 கிராம் வரை விற்கப்படுகிறது . ஒரு கிலோவிற்கு ரூ.72,500 ஆக விற்கப்படுகிறது.

பறக்கும் தங்கத்தின் விலை எங்கு போய் நிற்கும் என்று தெரியவில்லை. தங்கத்தின் இந்த விலை ஏற்றமானது அனைவரிடமும் ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே கூறலாம். நெஞ்சை பிடிக்க வைக்கும் தங்கத்தின் விலை ஏற்றம்.

Exit mobile version