தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! அதிகமானது தங்கம் விலை!! ஒரு நாளில் 250 ரூபாய்க்கும் மேல் ஏறியது!!
இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றத்தில் தான் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 32 அதிகரித்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 35 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,562 ஆகவும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ.36,496 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ 256 அதிகரித்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,997 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,816 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.280 அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,620 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,770 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,060 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,340 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,080 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 48,080 ஆகவும் உள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 72.21 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 722. 10 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 72,210 ஆகவும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையைக் காட்டிலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.72,210 ஆகவும் உள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.67,210 ஆகவும், கேரளா, புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய். 67,210 ஆகவும் விற்கப்படுகிறது.