Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

#image_title

திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அதில் பயணம் செய்து வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு ஆண் பயணி சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளார். அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் வைத்திருந்த லேப்டாப் சார்ஜரில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

உடனடியாக அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 501.5 கிராம் எனவும் அதன் மதிப்பு ரூ.30,52,129 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version