Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன கோலி சோடா பட ATM..!!

Goli Soda Seetha

#image_title

Goli Soda Seetha: கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கோலிசோடா. இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதை நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளை சுற்றி நடக்கும் ஒரு  கதையாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் முன்னதாக பசங்க படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் தான் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் நடித்த அவர்களின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்றது. இந்த படத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒரு கேரக்டர் என்றால் அது ஏடிஎம் (Goli Soda Actress Seetha) என்ற கேரக்டர் தான். அந்த படத்தில் ஏடிஎம் என்ற கேரக்டரில் நடித்தது நடிகை சீதா.

இவர் விக்ரம் சமந்தா நடிப்பில் வெளியான பத்து என்றதுக்குள்ள, மற்றும் பிரபு தேவா நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான சார்லின் சாப்ளின் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கோலிசோடா படத்தில் ஒல்லியான உடம்பு, புட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு செடி ஒன் ப்ளவர் என்று காதலுக்கு அவர் சொல்லும் அந்த காதல் டயலாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகை சீதாவின் சமீபத்திய போட்டோ வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Goli Soda Seetha

தற்போது வைரலாகி வரும் அவரின் புகைப்படத்தில் அவர் மிக அழகாக உள்ளார். அனைவரும் கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது என்று கூறும் அளவிற்கு அவர் ஆளை மாறிவிட்டார் என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன.

மேலும் படிக்க: மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன்.. நடிகர் ரஜினி புகழாரம்..!

Exit mobile version