தமிழ் நடிகர்களில் உச்ச நடிகராக வலம் வருபர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார். இவரின் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது நடிகர் அஜித் குமார் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் மாட்ரிட் மற்றும் ஸ்பெயின் ல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து வருகிறது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் திரிஷா,பிரசன்னா,சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் அப்டேட் குறித்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தனது x தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லி எப்படி போயிட்டு இருக்கு என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் செலிப்ரேஷன் ஆஃப் லைஃப் இசைக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் செம்மையா இருக்கும்ல என மறைமுகமாக பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பகிர்ந்து வருகின்றனர்.