கடைசிவரையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி! வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்!

0
128

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் அவரும் சென்னையில் இருப்பார் ஓபிஎஸ் தேனியில் இருந்தால் அவரும் தேனிக்கு சென்று விடுவார். இவ்வளவு ஏன் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றால் கூட அவருடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டு பயணங்களின் போது கூட ஓபிஎஸ் அவர்களின் நிழலாக இருந்து வந்தவர் அவருடைய மனைவி விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதே போல ஓபிஎஸ் அவர்கள் எங்கு சென்றாலும் அவருடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது..

பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்தவுடன் சசிகலா ஒரு நிமிடம் அதிர்ந்து போனதாக சொல்கிறார்கள். 66 வயதாகும் விஜயலட்சுமி சுமார் 45 வருடங்களாக பன்னீர் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். இவருடைய சொந்த ஊர் உத்தமபாளையம் என்று சொல்லப்படுகிறது அங்கேயே விஜயலட்சுமியின் தந்தை மிகப்பெரிய மில் வைத்திருந்தார். எனவும், சொல்கிறார்கள்.

அத்துடன் உத்தமபாளையத்தில் மிகப்பெரிய அளவில் விவசாயமும் செய்து வந்தவர் விஜயலட்சுமியின் தந்தை தமிழக நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தந்தை பி டி ஆர் பழனிவேல் ராஜன் காலம் முதலே அவர்களுக்கு சொந்தமான இடங்களில் விஜயலட்சுமியின் தந்தை அழகு பாண்டி தான் விவசாயம் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இப்பொழுதும் கூட பழனிவேல் தியாகராஜன் குடும்பத்துடன் இணைந்துதான் விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அழகு பாண்டி என்று தெரிகிறது.

அந்த அளவிற்கு வசதியான மனிதராக இருந்தாலும் கூட தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பால்பண்ணை வைத்திருந்த பன்னீர் செல்வத்திற்கு தன்னுடைய மகள் விஜயலட்சுமியை மணம் முடித்து கொடுத்திருந்தார் அழகு பாண்டி.. திருமணம் செய்து கொண்டது முதலே பன்னீர்செல்வம் மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கு இடையிலான பந்தம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. விஜயலட்சுமி கணவர் பன்னீர்செல்வம் சட்டசபை உறுப்பினர், அமைச்சர்,முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று மிகப்பெரிய பதவிகளில் இருந்தாலும் கூட விஜயலட்சுமி சாதாரண பெண்ணாகவே வலம் வந்து இருக்கின்றார்.

அதிலும் பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் அவருடன் நிழலாக இருந்து வந்தவர் விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதேபோல பன்னீர்செல்வம் எங்கே சென்றாலும் அவருடன் தன்னுடைய மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் .அதேநேரம் கட்சிக் கூட்டம், போராட்டம், பேச்சுவார்த்தை என்று வரும் சமயங்களில் மட்டும் விஜயலட்சுமி தன்னுடைய கணவரை பிரிந்து இருப்பார் என தெரிவிக்கிறார்கள்.

அந்த சமயத்திலும் கூட சரியான நேரத்திற்கு பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் அழைத்து சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்காமல் இருக்க மாட்டார் விஜயலட்சுமி என்று தெரிவிக்கிறார்கள். அதேபோல பன்னீர் செல்வமும் மனைவி எங்கே இருந்தாலும் சரியான நேரத்திற்கு தொலைபேசியில் அழைத்து அவரை சாப்பிட சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார் என்கிறார்கள்.

இரண்டு மகன்கள் ஒரு மகள் என்று இருக்கின்ற நிலையில், மூன்று பிள்ளைகள் மீதும் விஜயலட்சுமிக்கு அதீத பாசம் என கூறுகிறார்கள். இளையமகன் ஜெயபிரதீப் என்றால் விஜயலட்சுமி அவர்களுக்கு செல்லம் சற்று அதிகமாம். இளைய மகனான ஜெயபிரதீப்பை சட்டசபை உறுப்பினர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் வைத்து பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக கடைசி வரையில் அவருடைய ஆசை நிறைவேறவே இல்லை தாய் மீதான அளவுக்கு மீறிய பாசம் காரணமாக, தன்னுடைய இனிஷியல் கூட தாய் விஜயலட்சுமியின் பெயரை சேர்த்துக் கொண்டவர் ஜெயபிரதீப் என்று சொல்கிறார்கள். அதேபோல அரசியல் ரீதியாகவும் பல நேரங்களில் ஓபிஎஸ் அவர்களுக்கு விஜயலட்சுமி உதவி புரிந்ததாக தெரிவிக்கிறார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த சமயத்தில் போயஸ் கார்டனுக்கு விஜயலட்சுமியும் சென்று வந்துகொண்டிருந்தார் என தகவல் கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் சசிகலாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் தற்சமயம் வரையில் விஜயலட்சுமிக்கு நீடித்து இருக்கிறது. இதன் காரணமாக, தான் விஜயலட்சுமி மறைவு செய்தியைக் கேட்டவுடன் கண்ணீரும் அழுகையுமாக சசிகலா மருத்துவமனைக்கு விரைந்து வந்ததாக கூறுகிறார்கள்.

அவர் மருத்துவமனைக்கு காரில் வந்து இறங்கியதில் இருந்து பன்னீர் செல்வத்துடன் சந்திக்கும் வரையில் சசிகலா கண்களில் ஆனந்த கண்ணீர் நிற்கவில்லை அதேபோல பன்னீர் செல்வத்துடன் உரையாற்றும் போது கூட சசிகலா கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு விஜயலட்சுமி உடன் நெருக்கமான ஒரு உறவை சசிகலா ஏற்படுத்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கிறார்கள். பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தத்தை ஆரம்பித்த சமயத்தில் விஜயலட்சுமியின் மூலமாக சசிகலா தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி இருந்ததாகவும், அதன் பிறகு தினகரனை ரகசியமாக சென்று பன்னீர்செல்வம் சந்தித்ததன் பின்னணியிலும் விஜயலட்சுமி இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்த அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் விஜயலட்சுமி பன்னீர்செல்வத்துக்கு ஒரு மிகப்பெரிய உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை கவனிக்கும்போது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான தம்பதிகளாக பன்னீர்செல்வம் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கடைசிவரையில் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.