Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

களத்தில் இறங்குங்கள்! உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்!

மக்களுக்காக மக்கள் நலம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன் முழு விபரம் வருமாறு தேர்தல் நேரம் vanthu விட்டால் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் மக்களுடன் ஒன்றாக இருக்கும் இயக்கம்தான் திமுக என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

சென்ற வருடம் இதே சமயத்தில் தான் கொரோனாவால் பாதித்த மக்களுக்கும் உதவும் வகையில் ஒன்றினைவோம் வா என்ற செயல்பாடு மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு மருத்துவ உதவி மற்றும் தினசரி வேலைகளை திமுக நிறைவேற்றியிருந்தது. கழகத்தின் உடன்பிறப்புகளே எல்லாம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், அதில் பங்கேற்று கொண்டார்கள் இந்த கோடை காலத்தில் மக்களிடையே தாகத்தைத் தீர்ப்பதற்காக நம்முடைய கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் அமையுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் கொரோனா இரண்டாவது அலைத் தொடர்பாக மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை கடும் எச்சரிக்கை செய்து இருப்பதன் காரணமாக, அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்குங்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுங்கள் வாய்ப்பு இருக்கும் பகுதிகளில் முகக் கவசம் போன்றவற்றை கொடுங்கள் தேர்தல் முடிவுகளில் நிச்சயமாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் ஆனாலும் அது வரையில் காத்திருக்க மக்களுக்கான உதவிகளை எப்போதும் போல தொடர்ந்து செய்திடுவோம் ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

Exit mobile version