Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நற்செய்தி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் போட்ட புது உத்தரவு!

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடக்கத் தொடங்கியது ஆகவே கோவின் செயயலியில் பதிவு செய்தால் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள இயலும் என்ற நடைமுறை இதுவரையில் அமலில் இருந்து வந்தது. இந்த சூழலில் அந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது 18 முதல் 44 வயது மழை இருப்பவர்கள் நேரடியாக பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அதோடு இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களை கருத்தில் வைத்து இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதேசமயத்தில் இந்த முடிவை மாநில அரசுகள் தான் இறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த நடவடிக்கையானது தடுப்பூசி வீணாவதை குறைப்பதற்கு உதவி புரியும் எனவும், தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பது தொடர்பாக தெளிவான தகவல் அனைத்து மாவட்ட நோய்தடுப்பு அதிகாரிகளுக்கும் அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு காரணங்களுக்காக நேரடிப் பதிவு கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பலரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லாத காரணத்தாலும் பதிவு செய்யாதவர்கள் நேரில் வராமல் போனதன் காரணமாகவும் , இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதி அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும் தனியார் தடுப்பூசி மையங்களுக்கு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Exit mobile version