அக்னிபத் வீரர்களுக்கு ஒரு நற்செய்தி! அதனால் ஏற்படும் மறியல் போராட்டம்!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. அக்னிபத் வீரர்களுக்கு கல்வி தகுதியானது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும்.அவர்களின் வயது வரம்பு 17 ½ முதல் 21 குள் இருக்கவேண்டும்.அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாதகாலம் அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்ளுவர்கள்.பயிற்சி காலம் முடிந்ததும்.4 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம்.அப்போது அவர்கள் நிரந்தர வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதில் 25 சதவித வீரர்கள் மட்டுமே பணி அமர்தப்படுவார்கள்.மீதமுள்ள 75 சதவித வீரர்கள் பிடிப்பு பணம் கொடுத்து திருப்பி அனுப்படுவார்கள்.அவர்கள் முப்படைகளில் மீண்டும் சேர முடியாது. நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும். 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ வீரர்களின் வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கு பீகாரில் அக்னிபத் திட்டதின் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகிறார்கள்.
அந்த இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர்.அந்த வகையில் நேற்று ரெயில்களை மறித்தனர் மற்றும் 2 ரெயில்கள் தீ வைக்கப்பட்டது.இவ்வாறு பல செயல்களை செய்து வந்த நிலையில் முக்கியமான பெண் பிரமுகர் மீது தாக்குதல் நடதினார்கள். கல் வீசி தாக்குதல் செய்யப்பட்ட நிலையில் பெண் எம்.எல்.ஏ காயமடைந்தார். போராட்டம் மிகவும் பெரிதான நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.அந்த அறிவிப்பில் ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு வயது வரம்பு 21 ல் இருந்து 23 ஆகா உயர்த்த படும் என்றும் அறிவிக்கப்பட்டது.