Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Good news for Ayyappa devotees!! Don't miss it!!

Good news for Ayyappa devotees!! Don't miss it!!

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சபரிமலைக்கு செல்ல ஏதுவாக இருக்க நகரின் முக்கியமான பகுதிகளில் அடுத்த 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடை பெறுவதை பார்க்க சபரி மலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை,திருச்சி,மதுரை போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதாவது 60 நாட்களுக்கு தங்கள் பகுதிகளில் இருந்து சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிமலைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து கார்த்திகை, புரட்டாசி மாதங்களில் தங்களின் புனித பூஜைக்காக பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் தனியாக செல்லும் ஐயப்ப பக்தர்களும் இந்த பேருந்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் குழுவாக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த சிறப்பு பேருந்துகளை (Online)மூலம் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அது மட்டும் அல்லாமல் TNSTC என்ற Official App மூலம் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version