கண்ணகி நகர் பகுதியில் கண்கவர் ஓவியங்களை சென்னை மாநகராட்சியின் மேயர் R.பிரியா திறந்து வைத்திருக்கிறார்.
சென்னை மாநகரிலிருக்கின்ற கண்ணகி நகர் என்ற பகுதியிலிருக்கின்ற தமிழக கிராமப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள மேம்பால தூண்களில் கண் கவர் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஓவியங்களை திறந்துவைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில் கண்காட்சியை பார்வையிட்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து மேயர் பிரியா கண்ணகி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்திருக்கிறார்.
அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் உரையாற்றியிருக்கிறார் அப்போது அவர் தெரிவித்ததாவது, கண்ணகி நகர் சமுதாய மருத்துவமனையில் மார்ச் மாதத்தில் மட்டும் தற்போது வரையில் 48 பேருக்கு பிரசவம் நடந்திருக்கிறது என்றும், இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே, காசநோய் சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள் இந்த மருத்துவமனையை நாடி வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கண்ணகி நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். இதனைஅடுத்து மழை நீர் வடிகால் பணிகள் சென்னை மாநகராட்சி முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகவே மழைநீர் வடிகால் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.