சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!
இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர்.
அவ்வாறு பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வருவோருக்கு ஒரே பயணச்சீட்டு வழங்கும் வகையில் நடைமுறையை கொண்டு வரலாம் என்ற ஆலோசனையை நடத்த உள்ளனர். அவ்வாறு ஒரே பயணச்சீட்டு கொண்டு வந்தால் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என பயணச்சீட்டு வாங்கும் நேரம் விரயமானது குறையும்.
எனவே சென்னை மாநகர பொது போக்குவரத்தானது ஒன்றிணைந்து ஒரே பயணச்சீட்டு திட்டத்தை செயல்படுத்த அதற்குரிய அதிகாரிகளுடன் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். இவ்வாறு ஒரே பயணச்சீட்டு கொண்டு வரும் பொழுது டிஜிட்டல் முறையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக கூறியுள்ளனர். ஒரே பயணச்சீட்டு கொண்டு வருமாயின், பயணிகள் சுலபமாக பயணிக்க முடியும்.