போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அறிமுகப்படுத்திய இலவச வகுப்புகள்!!

0
101
Good news for competitive exams!! Free classes introduced by the government!!

தமிழகத்தில் நடைபெறக்கூடிய அரசு சார்ந்த போட்டி தேர்வுகளான அனைத்திற்கும் இனி இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அதற்காக மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயிற்சி பெறலாம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

போட்டி தேர்வுகளில் விவரங்கள் :-

✓ நான் முதல்வன் திட்டம்
✓ டிஎன்பிஎஸ்சி ( அனைத்து பிரிவிற்கும் )
✓ ஆர்ஆர்பி
✓ யூபிஎஸ்சி

போன்ற தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி தொலைக்காட்சியிலும் பயிற்சிகள் ஒளி பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்புகள் :-

✓ தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
✓ ஆசிரியர் தேர்வு வாரியம்
✓ பணியாளர் தேர்வாணையம்
✓ ரயில்வே தேர்வு வாரியம்
✓ வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பின்னர், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும்‌ இது குறித்த கால அட்டவணை தொடர்பான விவரங்களை அறிய www.tamilnaducareersericestn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.