இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மௌன ராகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த மாபெரும் இயக்குனர். இவர் தற்பொழுது கமலுடைய தக் லைஃப் பாடத்தினை இயற்றி வருகிறார். கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிரத்னத்தை பற்றி நடிகர் கார்த்தி சமீபத்திய ஒரு விழாவில் பேசி இருப்பது பெரும் வைரலாகி வருகிறது. அதாவது உதவி இயக்குனராக ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் பணியாற்றினார் கார்த்தி. அந்தப் படத்தில் 3 ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக சித்தார்த் நடித்திருப்பார்.
ஆயுத எழுத்து திரைப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங் இருக்கு வந்த நடிகர் சித்தார்த் அவர்கள், அங்கே உள்ளவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பது மற்றும் அங்கே இருக்கும் கதவுகளை சரி பார்ப்பது, கேமரா ஆங்கிள் களை சரி பார்ப்பது போன்ற விஷயங்களில் பரபரப்பாக பணியாற்றி வந்துள்ளார்.
இதனைக் கண்ட மணிரத்தினம் அவர்கள் கார்த்தியிடம் வந்து ‘டேய் அவன நடிக்க மட்டும் சொல்லுடா’ என கூறினாராம் இயக்குனர் மணிரத்தினம். இதனை நடிகர் கார்த்திக் மேடையில் செல்லும் பொழுது ரசிகர்களிடையே சிரிப்பலை எழுந்துள்ளது