தமிழக அரசு தமிழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கும் தமிழக அரசு சார்பில் ஊக்க தொகைகள் அவர்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்றவாறு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் ஒரு புதிய திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திட்டங்கள் :-
✓ இந்த திட்டத்தின் படி 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ2000 வழங்கப்பட்டு வருகிறது.
✓ 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6000
✓ 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.8000
✓ பட்டப் படிப்புக்கு ரூ. 12000.
✓ பட்டம் மேற்படிப்புக்கு ரூ. 14000 என அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனை விரிவுபடுத்தும் வகையில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு முதல் பிஎச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ 1,00,000 வீதம், 50 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்பட உள்ளது என மாற்றத்திறனாளிகளின் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்திருக்கிறார்.