EPS ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி 6 மாதம் முதலீடு செய்தாலே போதும் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
290
Good news for EPS employees.. Just invest 6 months from now - Central Govt Notification!!

EPS ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி 6 மாதம் முதலீடு செய்தாலே போதும் – மத்திய அரசு அறிவிப்பு!!

பணியாளர் ஓய்வூதிய திட்டமான EPS,EPFO-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும்.பின்னர் ஓய்வுபெற்ற காலத்தில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.மாதந்தோறும் ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 12% EPF கணக்கிற்கு பங்களிக்கின்றனர்.

இதில் 8.33% ஊழியர்களின் EPSக்கும் மீதமுள்ள 3.67% EPFக்கும் செல்கிறது.இந்த EPS திட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்ற பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று விதி இருந்த நிலையில் தற்பொழுது பணியாளர் ஓய்வூதியத் திட்டம்,1995-இல் புதிய திருத்தும் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில்(EPS) இப்பொழுது 6 மாதங்களுக்கு குறைவான பங்களிப்பை கொடுக்கும் உறுப்பினர்களும் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.இந்த பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் இருந்து 6 மாதங்களுக்குள் வெளியேறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மத்திய அரசு EPS விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு பின்பு திட்டத்தில் இருந்து வெளியேறும் நபர்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற விதி இருந்தது.ஆனால் தற்பொழுது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திருத்தத்தில் EPS திட்டத்தில் 6 மாதங்களுக்கு குறைவான பங்களிப்பு செலுத்தி விட்டு திட்டத்தை விட்டு வெளியேறும் உறுப்பினர்களுக்கு இனி அளிக்கப்படும்.இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.